கொரோனா.. “C R D Type” மக்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.. மருத்துவர் வித்யா ஹரியின் அறிவுரை

சென்னை: கொரோனா காலத்தில் சிஆர்டி டைப் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மருத்துவர் வித்யா ஹரி ஐயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டாக்டர் வித்யா ஹரி அய்யர் ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள அனைவரும் ஜாக்கிரதையாக இருக்குமாறு பொதுவாக கூறிவிட்டோம். ஜாக்கிரதை என்றால் யாரெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். C R D டைப் நபர்கள்தான். சரி சி என்றால் யாரென பார்ப்போம். கார்டியோ வாஸ்குலர் நோய் உள்ளவர்களை சி டைப் என அழைப்போம். அதாவது இதய நோய் இருப்பவர்கள், பை பாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆகியோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சிரமம் அடுத்ததாக ஆர் என்றால் ரெஸ்பிரேட்டரி. மூச்சு பிரச்சினைகள் இருப்போர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமத்தை கொடுக்கும் வீசிங் இருக்கும். சிலர் காலையில் எழுந்தவுடன் நிறைய தும்மல் போடுவர். சிலருக்கு அடிக்கடி இருமல், சளி, காய்ச்சல் ஏற்படும். இவையெல்லாம் நுரையீரல் சம்பந்தமானவை.

கொரோனா காலம் அடுத்தபடியாக டி என்றால் என்னவென பார்ப்போம். டி என்றால் டயாபெட்டீஸ். அதாவது நீரிழிவு நோய். உலகிலேயே சர்க்கரை நோய் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் சி ஆர் டி நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வருமுன் காப்போம் என்பது அனைவரும் தெரியும். எனவே இந்த நோயுள்ளவர்கள் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.

நோய் வந்து மருத்துவமனைக்கு சென்று அதற்கு சிகிச்சை எடுப்பது என்பது மிகவும் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அது போல் வயதானவர்கள், சின்ன குழந்தைகள் வெளியே செல்வதை தடுக்கலாம். ஐசோலேஷன் என்றால் தனிமைப்படுத்துதல் என்பது கிடையாது. நம்மை நாம் ஜாக்கிரதையாக பார்த்து கொள்வது. கர்ப்பிணிகளுக்கு தற்போதுள்ள நிலையில் இரு வகையான மன அழுத்தங்களை கொண்டுள்ளனர்.

ஒன்று நாம் கர்ப்பமாக இருக்கிறோம். உடல்ரீதியாக பிரச்சினை ஏற்பட்டால் யாரை அணுகுவது எப்படி போவது என்ற அச்சம் இருக்கும். அது போல் நிறைமாதமாக இருக்கும் கர்ப்பிணிகள், திடீரென வலி வந்துவிட்டால் எப்படி மருத்துவமனைக்கு செல்வது, சரியான சிகிச்சை கிடைக்குமா, நாமும் பிறக்கும் குழந்தையும் நலமுடன் வீட்டுக்கு வருவோமா என்ற கேள்விகள் எழும்.

பணப் பற்றாக்குறை, வேலை இழப்புகளால் நிறைய பேருக்கு மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். மனதில் நேர்மறையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு நோய் இருந்தால்தான் அது ஹெல்த் என்பதில்லை, உடல்ரீதியாக பாதிப்பிருக்கலாம், மனரீதியிலான பாதிப்பிருக்கலாம், பொருளாதார ரீதியில் பாதிப்பிருக்கலாம், உளவியல் ரீதியிலும் பாதிப்பிருக்கலாம். இப்படி எது இருந்தாலும் அது உடல்நிலையை பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் முன்பே கூறியுள்ளது.

பொருளாதார சரிவு இப்படி சமூக ரீதியிலாகவும், பொருளாதார ரீதியிலாகவும் உடல்ரீதியிலாகவும் பெரும் சவால்களை சந்தித்து வருகிறோம். இவை எல்லாம் சேர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதற்காகத்தான் ஸ்டே பாசிட்டிவ் என சொல்கிறோம். 2015-இல் சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி 2, 3 மாதங்கள் கஷ்டப்பட்டோம். பின்னர் மீண்டு வந்தோம். எனவே இதுவும் கடந்து போகும் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டே இருந்தால் உங்களால் பாசிட்டிவ்வாக இருக்க முடியும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். சுவர் என்பது நம் உயிர். நாம் உயிரோடு இருந்தால்தான் பொருளாதார சரிவிலிருந்து மீள முடியும் என்றார்.

Related posts

Leave a Comment