காலால் இயங்கும் கை சுத்திகரிப்பான்; கல்லூரி பேராசிரியர் வடிவமைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்; கிருஷ்ணன்கோவில்கலசலிங்கம் பல்கலை ஆராய்ச்சி பேராசிரியர் ஜெயக்குமார் கொரோனா கிருமி தடுப்பு நடவடிக்கைக்காக காலால் இயங்கும் கை சுத்திகரிப்பான் இயந்திரம் செய்து மதுரை கலெக்டர்வினயிடம் டெமோ செய்து வழங்கினார்.தற்போது ஒருவர் சுத்திகரிப்பான் பயன்படுத்தியபிறகு அதை மற்றொருவர் பயன்படுத்தும்போதுகிருமி தொற்று பரவும் அபாயம் உண்டு. ஆனால் இந்த இயந்திரத்தில் 250 முதல் ஒரு லிட்டர் திரவபாட்டிலை பொருத்தி காலால் மிதித்து கிருமிநாசினியை பயன்படுத்தும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது. இதை நேரில் பார்வையிட்ட கலெக்டரிடம் பேராசிரியர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.பேராசிரியர் ஜெயக்குமாரை, வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகி, துணைத் தலைவர்கள் சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினர்.

Related posts

Leave a Comment