தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1596-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா உறுதியானதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இன்று ஒரோ நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது. 

பயணிகள்

இன்று ஒருவர் இறந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.12 சதவீதமாக உள்ளது. தற்போது சிகிச்சையில் 940 பேர் உள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 2,10,538 பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் எண்ணிக்கை

நேற்று வரை வீட்டு கண்காணிப்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 1,08,337 ஆக உள்ளது. 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 87,159 ஆகும். வீட்டு கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 22,254 பேராகும். அரசு கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

இன்று ஒரே நாளில் 5,458 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இன்று மட்டும் 6,060 ரத்த மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கை 3,371 ஆக உயர்ந்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 29,074 ஆகும்.

Related posts

Leave a Comment