பணியால் ஆத்மதிருப்தி

கடந்த 11 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வருகிறேன், குழந்தைபேறு, விபத்து காயங்கள் என பல்வேறு தருணங்களிலும்என்னுடைய பணியை செய்து வருகிறேன். பிறரின் உயிர்காக்கும் மருத்துவத்தை விரும்பித்தான் இத்துறைக்கு வேலைக்கு வந்துள்ளேன். எப்போதும் உள்ளது போல் மக்களுக்கு தற்போதும் பணி செய்து வருகிறேன். கொரோனா ஒழிப்பு பணியில் ஒட்டுமொத்தமருத்துவத்துறையே ஓய்வின்றி வேலை செய்யும்போது அதில் நானும் ஒருவளாக மருத்துவ பணிசெய்வது நான் படித்ததின் நோக்கம் நிறைவேறுகிறது என்ற ஆத்மதிருப்தி ஏற்படுகிறது.-முத்துமாரி, செவிலியர், ஸ்ரீவில்லிபுத்துார்.கனிவோடு சிகிச்சைசேவை மனப்பான்மையுடன் தினமும் மருத்துவமனை வந்து எந்தவித சிரமமுமின்றி மகிழ்ச்சியோடு வேலை பார்க்கிறேன். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கனிவோடு வரவேற்று அவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம். மற்ற நேரங்களை விட தற்போது நோயாளிகள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நாங்களும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிகிறோம்.உமா மகேஷ்வரி, செவிலியர், சிவகாசி.அர்பணிப்பு உணர்வுடன் பணிகொரோனா நேரத்திலும் நோயாளிகள் யாராக இருந்தாலும் கனிவுடன் கவனித்து கொள்கிறோம். ஊசி போடும்போதும் மாத்திரை வழங்கும் போதும் நோயாளிகளை தொட்டுதான் சிகிச்சை அளிக்கிறோம். இந்நேரத்தில் மக்கள் பணிசெய்வதை கவுரமாக கருதுகிறேன்.இருந்தாலும் ஆரோக்கியத்தை பாதுகாத்துகொள்ள நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 தடவை கைகளை சானிடைசர், சோப்பு போட்டு கழுவுகிறன் . பணி முடிந்ததும் மருத்துவமனையிலே குளித்து விட்டு உடைகளை மாற்றிவிட்டு தான் ஊருக்கே வருகிறேன். வீட்டிற்கு சென்றதும் குழந்தையை தொடுவதற்கு முன்பு கை , முகத்தை சோப்பு போட்டு கழுவிய பின்னர்தான் தொடுகிறேன்.ரா.கார்த்திகா, செவிலியர், சாத்துார்.

Related posts

Leave a Comment