பகிர்வு_அறக்கட்டளை

இன்று (17-04-2020)
#பகிர்வு_அறக்கட்டளை சார்பில் எளிய 100குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசியும், 1 கிலோ துவரம்பருப்பும் வழங்கிகொண்டிருக்கும் செயல்பாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 300 கிராம் கருப்பட்டியையும் சேர்த்து வழங்குமாறு கருப்பட்டி கணேசன் நம்மிடம் வழங்கி களப்பணிக்கும் வந்துள்ளார். இராஜபாளையம் மாலையாபுரத்தில் 20 குடும்பத்திற்கும், பின் கபசுரக்குடிநீர் ராம் நகர் சார்பில் வழங்கிவிட்டு மீதம் 30 குடும்பத்திற்கு ஆக மொத்தம் 50 குடும்பத்திற்கு சரவணன் தலைமையில் வழங்கிவிட்டோம்.

#குறிப்பு

வீட்டில் உக்காந்து இப்பதிவை பார்த்தவுடன் விளம்பரமா என்று கூறும் நண்பர்கள் இம்முகநூல் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுங்கள். ஏனெனில், நாங்கள் உதவி செய்யச் செய்ய பதிவுபோட்டுக்கொண்டே இருப்போம். உங்களுக்கு கடுப்பாகும் யாரையும் நாங்கள் நோகடிக்க விரும்பவில்லை.

Related posts

Leave a Comment