Kariapatti Town in Tamil Nadu

காரியாபட்டி; பதிவு செய்யப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வரும் நிலையில் பதிவு செய்தும் புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கும் நிவாரண தொகை கிடைக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்து வரும் பலருக்கு அரசு நிவாரண தொகை வழங்கி வருகிறது. தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் கொரோன ஊரடங்கால் வேலை இன்றி சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. விழிப்புணர்வு இல்லாததால் பலர் புதுப்பிக்க தவறியதால் நிவாரணம் கிடைக்காது ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிப்பு 5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டும் பெரும்பாலான தொழிலாளர்கள் விழிப்புணர்வு இன்றி புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். புதுப்பித்து தருவதாக தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்கள் கட்டணம் வசூலித்து புதுப்பிக்காததால் பல தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் சிரமப்படுவதால் நிவாரணத்துக்காக ஏங்குகின்றனர். இதை கருத்தில் கொண்டு புதுப்பிக்காத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.தினம் தினம் சிரமமேகட்டட தொழிலாளர்கள் அன்றாடம் வேலை பார்த்துதான் பிழைப்பு நடத்துகிறோம். விபத்து காப்பீடு மற்றும் அரசு வழங்கும் நிவாரணம் கிடைக்க நலவாரியத்தில் பதிவு செய்கிறோம். போதிய விழிப்புணர்வு இல்லாததால் புதுப்பிப்பதற்கான சிந்தனை இல்லாமல் போகிறது. தற்போது கட்டட தொழிலாளர்கள் பலர் வேலையின்றி சாப்பாட்டிற்கே சிரமப்படுகின்றனர்.தற்போது பதிவு செய்த தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குகிறது. அறியாமையால் புதுப்பிக்க தவறியவர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு பரிசீலக்க வேண்டும்.சுந்தரபாண்டி, முன்னாள் பொருளாளர், அமைப்பு சாரா கட்டட தொழிலாளர் சங்கம், காரியாபட்டி.

Related posts

Leave a Comment