Srivilliputhur News

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு மலையடிவார மாந்தோப்புகளில் பூக்கள் பூத்தநிலையில் காய்கள் சரியாக காய்க்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.இப்பகுதியில் பல நுாறு ஏக்கரில் 200க்கு மேற்பட்ட மாந்தோப்புகள் உள்ளன. சரியான காலத்தில் காய்கள் காய்த்து உள்ளூர் மட்டுமின்றி மதுரை மார்கெட் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செண்பகதோப்பு மாம்பழங்கள் கொண்டு செல்லபடுவது வழக்கம்.இந்தாண்டு பூக்கள் பூத்தபின் தேவையான பருவத்தில் மழையின்றி நோய் தாக்கம் ஏற்பட்டு காக்கவில்லை. பலமுறை மருந்தடித்தும் போதியளவிற்கு காய்கள் காய்க்கவில்லை. ஏக்கருக்கு அதிகபட்சம் 20 டன் மாம்பழங்கள் விளையவேண்டியநிலையில் 8 முதல் 10 டன் காய்களே காய்த்துள்ளது. 100ல் 10 விவசாயிகளின் தோப்புகளில் தான் மா விளைச்சல் உள்ளது. மற்றவர்களின் தோப்புகளில் கொத்தாக காய்க்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காய்கள் தொங்குகிறது. ஆண்டில் 4 மாதம் மட்டும் விளையும் மாங்காயை நம்பி பல லட்சம் ரூபாய் முதலீடு செய்த விவசாயிகள் போதிய வருவாயின்றி மனவேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

Related posts

Leave a Comment