தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க மாநகராட்சி தடை

சென்னை: ‘அரசு மருத்துவமனைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில், நிவாரணம் மற்றும் உணவு பொருட்கள் வழங்க கூடாது’ என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:ஊரடங்கு அமலில் உள்ளதால், தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு, உயர்நீதிமன்ற வழிக்காட்டுதல்படி, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

தற்போது, மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதிகள், அரசு மருத்துவமனைகள், சென்னை மாநகராட்சி சுகாதார மையங்கள், கொரோனா தொற்று நோய் பரிசோதனை மையங்கள் மற்றும் தொற்று நோய் சிகிச்சை வழங்க, அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள, தனியார் மருத்துவமனைகள் போன்ற பகுதிகளுக்கு, 2 கி.மீ., சுற்றளவுக்கு உட்பட்ட இடங்களில், உணவு வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

 தொற்று நோய் கண்டறியப்பட்டு, மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட பகுதிகள், ஆபத்தானவை. அப்பகுதியை சுற்றி, 2.கி.மீ., சுற்றளவுக்கு உட்பட்ட இடங்களில், உணவு வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது

Related posts

Leave a Comment