சாத்தூர் டவுன் நகர ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டேக்ஸி டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSRR MLA அவர்கள்வழிகாட்டுதலின் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு S V சீனிவாசன் அவர்கள் சாத்தூர் டவுன் நகர ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டேக்ஸி டிரைவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்களை வழங்கினார் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Read MoreDay: April 23, 2020
தென்னந்தோப்புகளில் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்துார்; மம்சாபுரம் பகுதி தென்னைதோப்புகளில் வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்து நோய் தாக்குதலை கட்டுபடுத்தும் முறைகள் குறித்து விளக்கினர்.தென்னை மரங்களில் வெள்ளை ஈ நோய் தாக்குதல் ஏற்பட்டு மரங்கள் பாதிக்கபடுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி தலைமையில் அலுவலர்கள் அம்மையப்பன், அழகுசுந்தரிஆய்வு செய்தனர்.பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா கூறுகையில், பாதிக்கபட்ட மரங்களின் கீழ்மட்ட ஓலைகளில் விசைதெளிப்பான் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து ஏக்கருக்கு 2 விளக்குபொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்தும்,மஞ்சள் வண்ணஒட்டுபொறி ஏக்கருக்கு 20 எண்ணம், 5 முதல் 6 அடி உயரத்தில் வைத்தும், கிரைசோபிட் இரைவிழுங்கிகள், என்கார்சியா ஒட்டுண்ணிகளை பயன்படுத்தியும், வெள்ளைஈ நோய் தாக்குதலை கட்டுபடுத்தலாம், என்றார். தென்னை விவசாயி சங்க தலைவர் முத்தையா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
Read Moreஉதவிய உதவும் கரங்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்-ஸ்ரீவில்லிபுத்துார் எக்ஸ்னோரா துாய்மை பணியாளர்களுக்கு ரோட்டரி சங்க பிரமுகர் கருமாரிமுருகன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். எக்ஸ்னோரா சந்திரன் ,அலுவலர்கள் பங்கேற்றனர்.* ஸ்ரீவில்லிபுத்துார் மார்க்சிஸ்ட் சார்பில் நகராட்சி துாய்மை பணியாளர்கள் 200 பேருக்கு மாவட்ட செயலர் அர்ஜூனன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். நிர்வாகிகள் திருமலை, ஜெயக்குமார் பங்கேற்றனர்.*தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வத்திராயிருப்பு பண்டகசாலை மூலம் பயனாளிகளுக்கு வழங்கபட்டது. தாசில்தார் ராம்தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,ராமசாமி, பண்டகசாலை தலைவர் கோவிந்தன் பங்கேற்றனர்.
Read Moreபாதுகாப்பு படை வீரருக்கு முதல்வர் இ.பி.எஸ்., உறுதி
சென்னை: ‘மத்திய பாதுகாப்பு படை வீரரின் தாய்க்கு தேவையான, அனைத்துமருத்துவ உதவிகளும் கிடைக்க, ஏற்பாடு செய்யப்படும்’ என, முதல்வர், இ.பி.எஸ்., உறுதி அளித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்; மத்திய பாதுகாப்பு படை வீரர். குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் பணியில் உள்ளார். இவரது, 89 வயது தாயார், வீட்டில் தனியே உள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லை.தனக்கு தந்தை, சகோதரன் யாரும் இல்லாததால், தன் தாயாருக்கு மருத்துவ உதவி செய்யும்படி, தமிழக முதல்வருக்கு, டுவிட்டர் வாயிலாக, ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.அதற்கு, ‘டுவிட்டர்’ வாயிலாக பதில் அளித்துள்ள முதல்வர், இ.பி.எஸ்., ‘தாய்நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும், தங்கள் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். தம்பி கவலை கொள்ள வேண்டாம். தங்கள் தாய்க்கு தேவையான, அனைத்து மருத்துவ உதவிகளும், உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்’என, உறுதி அளித்துள்ளார்.
Read More