உதவிய உதவும் கரங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்-ஸ்ரீவில்லிபுத்துார் எக்ஸ்னோரா துாய்மை பணியாளர்களுக்கு ரோட்டரி சங்க பிரமுகர் கருமாரிமுருகன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். எக்ஸ்னோரா சந்திரன் ,அலுவலர்கள் பங்கேற்றனர்.* ஸ்ரீவில்லிபுத்துார் மார்க்சிஸ்ட் சார்பில் நகராட்சி துாய்மை பணியாளர்கள் 200 பேருக்கு மாவட்ட செயலர் அர்ஜூனன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். நிர்வாகிகள் திருமலை, ஜெயக்குமார் பங்கேற்றனர்.*தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வத்திராயிருப்பு பண்டகசாலை மூலம் பயனாளிகளுக்கு வழங்கபட்டது. தாசில்தார் ராம்தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,ராமசாமி, பண்டகசாலை தலைவர் கோவிந்தன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment