தென்னந்தோப்புகளில் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்துார்; மம்சாபுரம் பகுதி தென்னைதோப்புகளில் வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்து நோய் தாக்குதலை கட்டுபடுத்தும் முறைகள் குறித்து விளக்கினர்.தென்னை மரங்களில் வெள்ளை ஈ நோய் தாக்குதல் ஏற்பட்டு மரங்கள் பாதிக்கபடுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி தலைமையில் அலுவலர்கள் அம்மையப்பன், அழகுசுந்தரிஆய்வு செய்தனர்.பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா கூறுகையில், பாதிக்கபட்ட மரங்களின் கீழ்மட்ட ஓலைகளில் விசைதெளிப்பான் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து ஏக்கருக்கு 2 விளக்குபொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்தும்,மஞ்சள் வண்ணஒட்டுபொறி ஏக்கருக்கு 20 எண்ணம், 5 முதல் 6 அடி உயரத்தில் வைத்தும், கிரைசோபிட் இரைவிழுங்கிகள், என்கார்சியா ஒட்டுண்ணிகளை பயன்படுத்தியும், வெள்ளைஈ நோய் தாக்குதலை கட்டுபடுத்தலாம், என்றார். தென்னை விவசாயி சங்க தலைவர் முத்தையா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment