பாதுகாப்பு படை வீரருக்கு முதல்வர் இ.பி.எஸ்., உறுதி

சென்னை: ‘மத்திய பாதுகாப்பு படை வீரரின் தாய்க்கு தேவையான, அனைத்துமருத்துவ உதவிகளும் கிடைக்க, ஏற்பாடு செய்யப்படும்’ என, முதல்வர், இ.பி.எஸ்., உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்; மத்திய பாதுகாப்பு படை வீரர். குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் பணியில் உள்ளார். இவரது, 89 வயது தாயார், வீட்டில் தனியே உள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லை.தனக்கு தந்தை, சகோதரன் யாரும் இல்லாததால், தன் தாயாருக்கு மருத்துவ உதவி செய்யும்படி, தமிழக முதல்வருக்கு, டுவிட்டர் வாயிலாக, ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு, ‘டுவிட்டர்’ வாயிலாக பதில் அளித்துள்ள முதல்வர், இ.பி.எஸ்., ‘தாய்நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும், தங்கள் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். தம்பி கவலை கொள்ள வேண்டாம். தங்கள் தாய்க்கு தேவையான, அனைத்து மருத்துவ உதவிகளும், உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்’என, உறுதி அளித்துள்ளார்.

Related posts

Leave a Comment