இன்று ஒரே நாளில் 52.. தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பில் முக்கால் பங்கு சென்னைக்குதான்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் புதிதாக 52 நோயாளிகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மொத்த புதிய நோயாளிகள் எண்ணிக்கையில், சுமார் 72 சதவீதம் சென்னையிலிருந்து மட்டுமே பதிவாகியுள்ளது.

மே 3ம் தேதிக்கு தயாராக திட்டம்… திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?

எனவே சென்னையில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 452 உயர்ந்துள்ளது. கோவையில் இன்று புதிதாக 7 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

ணாமலை 1, திருவள்ளூர் 2, விருதுநகர் 1 என புதிதாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக இன்று யாருக்குமே கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஒரு நல்ல செய்தி. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை, கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

Related posts

Leave a Comment