மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து.. பக்தர்கள் ஏமாற்றம்

மதுரை: மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1821 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கோயில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு கோயில்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 14 ஆம் தேதி சித்திரை மாதம் பிறந்தது. இதனால் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் அங்கு வைகை ஆற்றில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உலக பிரசித்தி பெற்றது.இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருவது வழக்கம். இது சித்திரை திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த விழா கொடியேற்றம், பட்டாபிஷேகம், திக்விஜயம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம்,…

Read More

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1821 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சுகாதாரத் துறை சார்பாக நடத்தப்படும் செய்தியாளர்கள் சந்திப்பு இரண்டு மூன்று நாட்களாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதையடுத்து இன்று கொரோனா குறித்த அப்டேட்டுகளை வழங்க அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 66 பேரில் 38 பேர் ஆண்கள், பெண்கள் 28 பேர் ஆவர். இன்று மட்டும் தமிழகத்தில் 94 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 960 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 52…

Read More

ஐயா.. அந்த சம்பவம்.. அடக்கம் பண்ண எங்க நிலத்தை தர்றோம்.. எடுத்துக்கங்க.. பிரதமருக்கு தென்னரசி கடிதம்

மதுரை: “ஐயா.. என் அப்பா விவசாயி… எங்களுக்கு, 3 ஏக்கர் நிலம் இருக்கு.. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் உள்ள டாக்டர், நர்ஸ், போலீசார், நாளிதழ் மற்றும் துாய்மை பணியாளர்கள் வைரஸ் பாதிப்பால் இறந்தால், உடலை அடக்கம் செய்ய, எங்களுடைய நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று 9-ம் வகுப்பு படிக்கும் தென்னரசி என்ற மாணவி பிரதமருக்கு உருக்கமான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உயிரிழந்துவிட்டார்.. அவருடைய சடலத்தை புதைக்க அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொற்று குறித்த அறியாமையால் மக்கள் இவ்வாறு செய்திருப்பினும், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை இது உண்டு பண்ணியது.. உயிரிழந்த 2 டாக்டர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தது மிகப் பெரிய விவகாரமாக உருவெடுக்கவும், கோர்ட் இந்த விஷயத்தை தானாக முன்வந்து கையில்…

Read More

v.lakshminarayanan

சிவகாசி ஆனையூர் ஊராட்சி முதல் நிலை மன்ற தலைவர் V, கருப்பு என்ற லட்சுமி நாராயணன் அவர்கள் பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மதிய உணவு வழங்கினார் அன்றும் இன்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன் . வீ.கருப்பு என்ற லட்சுமி நாராயணன் அவர்கள் …

Read More

#DMKVirudhunagar

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி திருச்சுழி சட்டமன்ற தொகுதி, இலங்கை அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தங்கம் தென்னரசு MLA அவர்கள் அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கினார். #OndrinaivomVaa#DMKVirudhunagar

Read More

Aruppukottai news

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு சுமார் 50ஆயிரம் மதிப்பிலான முக கவசங்கள், கையுறைகள், உடை கவசங்களை வழங்கினார்கள்.

Read More

Vasi Vazhviyal Maiyam வாசி வாழ்வியல் மையம்

ஒரு நாளைக்கு செலவு போக நூத்தம்பது ரூபா கையில் இருக்கும்யா… பணத்தை விட உங்களைப் போன்ற சாதி சனத்தை சேர்த்து வச்சிருக்கேன்.. அது போதும்யா.. னு சொல்றாங்க மாரியாயி அக்கா… ரிலையன்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டில் பழம் வாங்குபவர்களுக்கு தோல் பளபளக்கும் பழங்கள் கிடைக்கலாம்… ஆனால் நிச்சயம் ஒரு பரிவோடு, இத வாங்கிக்கயா என்ற பாசத்தோடு, அன்றாடம் விற்பனைக்கு வரும் பழங்களை ஸ்டிக்கர் ஒட்டாது தந்திட இவர்களைப் போன்ற மாரியாயி அக்காக்களால் தான் முடியும்.. உணவோடு உணர்வுகளையும் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள். ஏசி அறையில் விலைபட்டியலோடு விற்கப்படும் பழங்களை அறிந்த உங்கள் பிள்ளைகளுக்கு இவரை போன்றோரிடம் வாங்கும் பொருட்களின் தரத்தையும், உயிர்ப்பையும் அதில் கிடைக்கும் திருப்தியையும் உணர செய்யுங்கள்…

Read More