தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1821 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சுகாதாரத் துறை சார்பாக நடத்தப்படும் செய்தியாளர்கள் சந்திப்பு இரண்டு மூன்று நாட்களாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதையடுத்து இன்று கொரோனா குறித்த அப்டேட்டுகளை வழங்க அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 66 பேரில் 38 பேர் ஆண்கள், பெண்கள் 28 பேர் ஆவர்.

இன்று மட்டும் தமிழகத்தில் 94 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 960 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 52 சதவீதமாகியுள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் 94 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 960 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 52 சதவீதமாகியுள்ளது.

Related posts

Leave a Comment