மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து.. பக்தர்கள் ஏமாற்றம்

மதுரை: மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1821 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கோயில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு கோயில்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 14 ஆம் தேதி சித்திரை மாதம் பிறந்தது. இதனால் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் அங்கு வைகை ஆற்றில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உலக பிரசித்தி பெற்றது.
இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருவது வழக்கம். இது சித்திரை திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த விழா கொடியேற்றம், பட்டாபிஷேகம், திக்விஜயம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் வைகையில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகளாக நடைபெறும்.

Related posts

Leave a Comment