இதுதாங்க என்னோட ஒரே ஆசை… தன்னோட விருப்பத்தை தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

மும்பை : கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய 47வது பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து ஏராளமான வாழ்த்துப்பதிவுகள் கிடைத்தன. தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ள சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய வெற்றிகரமான வாழ்க்கைக்கு எப்போதுமே அவர்கள் பிரார்த்திப்பதாக நன்றி தெரிவித்தார். மேலும் தற்போது தன்னுடைய ஒரே ஆசை, அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து நல்ல ஆரோக்கியத்துடன் கொரோனா ஓழிப்பு போராட்டத்தில் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனாவிற்கு நிதியுதவி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் 100 சதங்களை பூர்த்தி செய்து சாதனை படைத்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கடந்த மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக 50 கோடி ரூபாய் நிதியுதவியை அளித்துள்ளார். மேலும் மாதத்திற்கு 5,000 பேருக்கு உணவு வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ரசிகர்களின் வாழ்த்துமழை இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது 47வது பிறந்ததினத்தை சச்சின் டெண்டுல்கர் கொண்டாடி மகிழ்ந்தார். கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிற்குள்ளேயே அவர் இருந்தாலும், அவரது பிறந்தநாள் மிகவும் சிறப்பாகவேஅமைந்தது. ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய விட்டனர்.

வெற்றிப் பாதையில் நடை ரசிகர்கள் மற்றும் சக வீரர்களின் வாழ்த்துக்களுக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கர் நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் அவர்களது பிரார்த்தனைகள் மூலமே தான் தொடர்ந்து வெற்றிப் பாதையில் நடைபோட்டு வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

சச்சினின் ஒரே ஆசை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அனைவரும் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதன்மூலம் கொரோனாவிற்கு எதிரான போரில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி கொள்ள வேண்டும் என்றும் அதுவே தன்னுடைய ஒரே ஆசை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment