காப்பாற்றுமா கைத்தறித்துறை: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நெசவாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் ராட்டையில் நுால் சுற்றும் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளதால் இவர்களுக்கு கூடுதல் நிதியுதவி செய்திட கைத்தறித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.மாவட்டத்தில் ராஜபாளையம், சத்திரபட்டி, புத்துார், புனல்வேலி, முகவூர், ஸ்ரீவில்லிபுத்துார், சுந்தரபாண்டியம், அருப்புகோட்டை பகுதிகளில் பல ஆயிரம் நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். அரசின் இலவச வேட்டி, சேலை மற்றும் காடாத்துணி தயாரிப்பு மூலம் தொடர் வேலைவாய்ப்பு பெற்று தங்களின் வாழ்க்கைபாட்டை நடத்தி வருகின்றனர்.இத்தொழிலுக்கு தேவையான நுால்களை கைராட்டைகளில் நுாற்று கொடுக்கும் பணி , பாவு போடும் பணியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ராட்டையில் உற்பத்தியான நுால்கள் அனைத்தும் ஈரோட்டிலிருந்து மிஷின் மூலம் நெய்து வாங்குவதால் மரத்தடியிலிருந்து நுால் நுாற்றவர்கள் வேலை இழந்து தங்களின் ராட்டைகளை வீட்டு பரண்களில் துாக்கி வைத்தப்படி வருமானமின்றி உள்ளனர்.அதிலும் தற்போது கொரோனாவால் வருவாய்க்கான ஆதாரத்தையும் முற்றிலும் இழந்து தவிக்கின்றனர். மேலும் காடாதுணி உற்பத்தி திட்டமும் முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டதால் வேட்டி,சேலை தொழில் நெய்தலிலும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கைத்தறித்தொழிலை பாதுகாக்கும் வகையில் நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு கிடைத்திட அரசின் நடவடிக்கை மிகவும் அவசியமாகிறது.வேலைவாய்ப்புடன் நிதி உதவி தேவைஇலவச சேலை உற்பத்தி மற்றும் காடாத்துணி உற்பத்தியே இன்று நெசவாளர்களின் வாழ்வாதார தொழிலாகும். இதில் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதோடு தற்போதைய சூழலில் வருமானமின்றி தவிக்கும் நெசவாளர்களுக்கு போதிய நிதி உதவி செய்யவேண்டும். நிவாரணத்தொகை ரூ.ஆயிரத்தை சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கவேண்டும்.-கோதையூர் மணியன், நெசவாளர் சங்க நிர்வாகி, ஸ்ரீவில்லிபுத்துார்.

Related posts

Leave a Comment