ஸ்ரீவி.,யில் மருந்து, மளிகை தட்டுபாடு தேவையாகுது கலெக்டர் நடவடிக்கை

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரையிலிருந்து தினசரி சரக்கு லாரிகள் இயங்காததால் ஸ்ரீவில்லிபுத்துாரில்மருந்து மற்றும் மளிகை பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.மதுரை மொத்த மருந்து விற்பனையாளர்கள் மூலம் பல்வேறு மாவட்ட மருந்து கடைகளுக்கு தினசரி லாரி சர்வீஸ் மூலம் மருந்துகள் கொண்டு வருவது வழக்கம். தற்போது லாரி சர்வீஸ் இயங்காததால் மருந்துகள் அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்துார் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு நகர மருந்துகடைகளுக்கு மருந்துகள் அனுப்புவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்க்கான மருந்துகள் வரத்து குறைந்து நோயாளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதேபோல் மளிகை பொருட்கள் வரத்து இல்லாததால் கடைகளில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மதுரை சரக்கு லாரிசெட்டுகளை வாரத்தில் 2 நாட்களாகவது இயக்கி மாவட்டத்தில் மருந்து ,மளிகை பொருட்கள் தட்டுபாட்டை போக்க கலெக்டரின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment