10 ஆயிரம் மாஸ்க்குகள்

விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு 10 ஆயிரம் மாஸ்க்குகள் வழங்கப்பட்டது.மாவட்டத்தில் மக்களுடன் நேரடி தொடர்பில் களப்பணியாற்றி வரும் போலீசார், பொதுசுகாதாரம், உள்ளாட்சி,வருவாய் , தீயணைப்பு துறை அலுவலர்கள், துாய்மை பணியாளர்களுக்கு 10 ஆயிரம் மாஸ்க்குகள் துறை தலைமை அலுவலர்களிடம் கலெக்டர் கண்ணன் வழங்கினார். எஸ்.பி.,பெருமாள், திட்ட இயக்குனர் சுரேஷ், நேர்முக உதவியாளர் காளிமுத்து, சுகாதார இணை இயக்குனர் மனோகரன், டீன் ரேவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஷ்ணுபரன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment