Thangam Thenarasu

“அம்மா எப்டி இருக்காங்க?”

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வினைக் கழகத்தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் காலையில் மேற்கொண்டபோது, என்னிடத்தில் கேட்ட முதல் கேள்வி!

நான் சற்றும் எதிர்பாராத கேள்வி; ஆனால், சம்பிரதாயமான கேள்வி அல்ல!. அன்னை ஒருவரின் மீதான அன்பின் பிணைப்பில் எழுந்த கேள்வி அது.

குறிப்புகள், புள்ளிவிவரங்கள், பணி முன்னேற்றங்கள், செய்ய வேண்டிய வேலைகள், மாவட்ட அரசியல் நிலவரங்கள் போன்ற தகவல்களை வைத்துக்கொண்டு தலைவரின் கேள்விக்கணைகளை எதிர்நோக்கி இருந்த என் சராசரி மூளையைச் சட்டென விலக்கி விட்டுத் தலைவரின் கேள்வி என் இதயத்தைத் தொட்டது.

என்னிதயம் மட்டுமல்ல; காணொளியில் இணைந்திருந்த ஏனைய மாவட்ட முன்னோடிகளின் உள்ளங்களும் தலைவரின் கேள்வியில் நனைந்திருந்தன என்பதை கூட்டத்தின் முடிவில் வந்த தொலைபேசி அழைப்புகள் எனக்கு உணர்த்தின.

அம்மாவைப் பார்த்து ஒருமாத காலமாகிவிட்டதாலோ என்னவோ இந்தக் கேள்வியில் நான் நெக்குருகிப் போனேன். சென்னையில் இருக்கும் அவர்கள் முகம் ஒரு விநாடி வந்து மறைந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள், இந்த இயக்கத்தை கொள்கை உறுதி மிக்கதாக மட்டுமல்ல; நாமெல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற குடும்பப் பாச உணர்வோடு வளர்த்தார். அந்த உணர்வு அணுவளவும் குறைந்து விடாது தலைவர் தளபதி நம்மை வழிநடத்துகிறார் என்பதை இன்று காலை நான் அனுபவித்துப் பார்த்த போது ஒரு அலாதியான இன்ப உணர்ச்சி ஏற்படவே செய்தது.

தலைவர் கலைஞர் மறையவில்லை!

அவர் தலைவர் தளபதியாக வாழ்கிறார்!🙏

Related posts

Leave a Comment