ஜோதிகா பேச்சில் சூர்யாவின் கருத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு

சென்னை :’ .விழா ஒன்றில் பங்கேற்ற, நடிகை ஜோதிகா, கோவில் மற்றும் பள்ளி குறித்து பேசிய பேச்சு, பலரது கண்டனத்திற்கு ஆளானது. இதுதொடர்பாக, ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா, வெளியிட்டுள்ள அறிக்கை:’மரம் சும்மா இருந்தாலும், காற்று விடுவதாக இல்லை’ என்ற கருத்து, சமூக ஊடக விவாதங்களுக்கு, அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில், எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது விவாதமாக மாறி இருக்கிறது.

‘கோவில்களை போலவே, பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும்’ என்ற ஜோதிகாவின் கருத்தை, சிலர் குற்றமாக பார்க்கின்றனர்.இதே கருத்தை, விவேகானந்தர் போன்ற, ஆன்மிக பெரியவர்கள் ஏற்கனவே சொல்லியுள்ளனர். பள்ளி, மருத்துவமனை இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்ற கருத்தை, அனைத்து மதத்தினரும் வரவேற்பர்.ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம். மதங்களை கடந்து, மனிதமே முக்கியம் என்பதையே, எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்.தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர், அவதுாறு பரப்பும் போதெல்லாம், நல்லோர், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கின்றனர். ஊடகங்கள் இவ்விஷயத்தை சரியாக கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து, நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை, இவர்களே துளிர்க்க செய்கின்றனர்.இவ்வாறு, சூர்யா கூறியுள்ளார்.
இந்நிலையில் சூர்யா கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் கூறியது, நடிகர் சூர்யா கூறிய கருத்து சிறப்பு என பதவிவேற்றியுள்ளார்.

Related posts

Leave a Comment