தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? இன்று தெரியும்

சென்னை: தமிழகத்தில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன், முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். இன்று(ஏப்.,29), மாவட்ட கலெக்டர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில், கொரோனா நோய் பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில், தொற்று இல்லாத நிலையை ஏற்படுத்த, மே, 3ம் தேதிக்குபிறகும், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்; தொற்று இல்லாத பகுதிகளில், ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து ஆலோசிப்பதற்காக, சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர், இ.பி.எஸ்., தலைமையில் கூட்டம் நடந்தது. துணை முதல்வர், பன்னீர்செல்வம், சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கர், தலைமைச் செயலர், சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிப்பு செய்தால், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், இன்று காலை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்னரே, ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து, அரசு முடிவெடுக்க உள்ளது.

‘சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரிய மாநகராட்சிகளில், மக்களுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும், அதை பின்பற்ற மறுக்கின்றனர்,” என, முதல்வர், இ.பி.எஸ்., நேற்றைய கூட்டத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment