தொடர்ந்து அதிகரிக்கிறது.. இன்று மட்டும் 104 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 2162 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 104 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மொத்தமாக 2162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக 768 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் இரண்டு பேர் பலி ஆகியுள்ளார். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது

குணமடைந்தனர் தமிழகத்தில் இன்று 82 பேர் குணமடைந்து உள்ளனர்.தமிழகத்தில் மொத்தம் 1210 பேர் குணமடைந்து உள்ளனர். செங்கல்பட்டில் இன்று 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் செங்கல்பட்டில் 73 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மொத்தம் 23 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

வேறு எங்கு கேஸ்கள் திருவள்ளூரில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் திருவள்ளூரில் மொத்தம் 54 பேருக்கு கொரோனா உள்ளது. விழுப்புரத்தில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் விழுப்புரத்தில் 50 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பரிசோதனை மையம் 41ல் இருந்து 44 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 8087 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

அதிகமான சோதனை இதுவரை செய்யப்பட கொரோனா சோதனைகளில் இன்றுதான் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 109961 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்கத்தில் இதுவரை 101075 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 7886 நபர்களுக்கு இன்று கொரோனா சோதனை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் இன்று யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.

எப்படி வந்தது? இதனால் கிருஷ்ணகிரி எப்போதும் போல கிரீன் சோன் பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1455 ஆண்கள் மற்றும் 707 பெண்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்ட்டிவ் கேஸ்களில் எண்ணிக்கை 922 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 129 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று வந்த கேஸ்களில் பலருக்கு கொரோனா எப்படி வந்தது என்று தெரியவில்லை.

Related posts

Leave a Comment