ஒரே நாளில் மிக அதிக பாதிப்பு.. 161 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 2323 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொடர்ந்து வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. சென்னையில் மட்டும் வேகம் எடுத்து வந்த கொரோனா தற்போது மற்ற மாவட்டங்களிலும் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது .தமிழகத்தில் இன்றுதான் இதுவரை ஏற்பட்டதிலேயே அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் இன்றுதான் இதுவரை ஏற்பட்டதிலேயே அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 138 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை போக மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. அரியலூரில் இன்று ஒருவருக்கு கொரோனா வந்துள்ளது. மொத்தமாக ஏழு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரை மற்றும் செங்கல்பட்டில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் மொத்தம் 78 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது மதுரையில் மொத்தம் 84 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

மற்ற மாவட்டம் எப்படி ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மொத்தம் 26 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மொத்தம் 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.ராணிப்பேட்டை, சேலம் , திருவள்ளூர், கடலூரில் தலா ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடலூரில் மொத்தம் 27 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.ராணிப்பேட்டையில் மொத்தம் 40 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சேலம் நிலை சேலத்தில் மொத்தம் 32 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் மொத்தம் 55 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் மொத்தம் 2 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 9 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1035 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 142 குழந்தைகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலியாகவில்லை இன்று கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை. இன்று மொத்தம் 48 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 1258 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 9787 கொரோனா சோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 119748 கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா டெஸ்ட் தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 110718 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 9643 பேருக்கு இன்று இன்று மட்டும் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது.

Related posts

Leave a Comment