அஜித் பிறந்தநாளில் விஜய் ஃபேன்ஸ் செய்த வேலை.. திகைத்த டிவிட்டர்.. அசத்திட்டீங்க போங்க! #NanbarAjith

சென்னை: அஜித் பிறந்தநாளில் விஜய் ஃபேன்ஸ் செய்த வேலையால் சமூக வலைதளவாசிகள் புல்லரித்து போயுள்ளனர்.

தல அஜித் குமார் பற்றி நீங்கள் அறியாத 10 உண்மைகள் நடிகர் அஜித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். என் வீடு என் கணவர் படத்தில் பெயர் குறிப்பிடப்படாத பள்ளி மாணவராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் அஜித். தொடர்ந்து அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து போராடி வென்றவர் அஜித்.

ரசிகர் மன்றங்கள் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜித், ஏராளமான ரசிகர்களை கொண்ட மாஸ் நடிகராக வலம் வருகிறார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள போதும் ரசிகர் மன்றம் எதுவும் வேண்டாம் என இருந்து வருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை கலைத்தார் அஜித்.

உயிரை கொடுக்கும் ரசிகர்கள் அதேபோல் சமூக வலைதளங்களிலும் கணக்குகள் இல்லாத நடிகராகவும் உள்ளார். சமூக வலைதளங்களில் கணக்குகள் இல்லாவிட்டாலும் அஜித்துக்காக உயிரை கொடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

விஜய் ரசிகர்கள் இன்று அஜித் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரகம் ரகமான ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர். அஜித் ரசிகர்கள் ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்வது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும் விஜய் ரசிகர்களும் சேர்ந்து அஜித்துக்காக பாஸிட்டிவ் ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்வது வலைதளவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பாஸிட்டிவ் ஹேஷ்டேக்குள் வழக்கமாக விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் எலியும் பூனையுமாகத்தான் இருப்பார்கள். பாஸிட்டிவ் ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்வதிலும் சரி நெகட்டிவ் ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்வதிலும் சரி அவர்களுக்குள் பெரும் போட்டியே இருக்கும். ஆனால் இன்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பாஸிட்டிவான ஹேஷ்டேக்குகளை விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்வது வரவேற்பை பெற்றிருக்கிறது.

விஜய் பேச்சு #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்கின்றனர். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய விஜய், கோட் சூட் அணிந்து வந்தது குறித்த கேள்விக்கு நண்பர் அஜித் மாதிரி, ட்ரை பண்ணலாமே என்று கூறினார். அப்போதே நண்பர் அஜித் என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டானது.

விஜய் ஃபேன்ஸ் வாழ்த்து இந்நிலையில் இன்று அதே ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து விஜய் ரசிகர்கள் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். தளபதி விஜய் ஃபேன்ஸ் சார்பில் நண்பர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து என நடிகர் விஜய் ஃபேன்ஸ் என டிவிட்டர் ஹேண்டிலில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் வரவேற்பு அஜித் ரசிகர்கள் #HBDThalaAJITH, #AjithKumar, #தலஅஜித் என பல ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் விஜய் ரசிகர்களின் #NanbarAjith ஹேஷ்டேக்கை திரை பிரபலங்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Related posts

Leave a Comment