என்னை அணியில் இருந்து நீக்கியதற்கு இவர்தான் காரணம். அவரோட கண்ட்ரோல்ல நான் இருக்க மாட்டேன் – கெயில் ஆவேசம்

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவதைப் போலவே கரீபியன் தீவுகளிலும் கரீபியன் பிரிமியர் லீக் தொடர் வருடா வருடம் நடைபெற்று வருகிறது. இந்த தொடரிலும் கிட்டத்தட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் ஜமைக்கா அணிக்காக விளையாடி வருகிறார் கிரிஸ் கெய்ல். அந்த அணி கடந்த சில முறைகளில் கோப்பை வென்றதற்கு இவரும் ஒரு பெரும் காரணமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அந்த அணியில் இருந்து சமீபத்தில் அவர் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து டேரன் சம்மி தலைமையிலான செயின்ட் லூசியா அணியில் இணைந்துள்ளார் கெய்ல். இந்நிலையில் ஜமைக்கா அணியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கு காரணம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் ராம்நரேஷ் சர்வான் தான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் யூடியூப் இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு பேசியுள்ளார்.

ராம்நரேஷ் சர்வான் நீ ஒரு மிகப்பெரிய பாம்பு. இப்போதைக்கு நீ கரோனா வைரசை விட மிகக் கொடியவனாக மாறி விட்டாய். என்னை ஜமைக்கா அணியில் இருந்து வெளியேற்றுவதில் உனக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது. அணி உரிமையாளருடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி உனக்கு தேவையானவற்றை செய்து கொள்கிறாய்.

அணியை உனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறாய். அணியில் உள்ள வீரர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது. அதனை தாண்டி நாம் இருவரும் நண்பர்கள் என்று அனைவரிடமும் கூறி இருக்கிறாய். ஆனாலும், இன்னும் ஏன் எனது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. நீ ஒரு பாம்பு, என்னை பழிவாங்கி விட்டாய். கரீபியன் மக்கள் உன்னை நேசிக்க மாட்டார்கள்.

உன்னிடம் சரியான முதிர்ச்சியும் அனுபவமும் இல்லை. நம்ப வைத்து முதுகில் குத்தி வைத்து விட்டாய். என்னை குறைவாக மதிப்பிட்டு விட்டாய். 1996ஆம் ஆண்டிலிருந்து நான் கிரிக்கெட்டில் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். இந்த சகாப்தத்தில் நல்ல வீரராக நான் விடை பெறுவேன் என்று கூறியுள்ளார் கிறிஸ் கெயில்.

Related posts

Leave a Comment