கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு- சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அதிக வாய்ப்பு!

சென்னை: கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் சர்வதேச சந்தையில் இதன் விற்பனைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர் வர்த்தகர்கள்.

தமிழகத்தில் பழனி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு என ஏற்கனவே 34 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 35-வதாக கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கான முன் முயற்சியை எடுத்தவர் தற்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியரான விஜய கார்த்திகேயன். 2014-ல் கோவில்பட்டி துணை ஆட்சியராக இருந்த போது அவர் மேற்கொண்ட முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது.

இனி கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் யாரும் போலியாக தயாரித்தும் விட முடியாது. ஏற்கனவே வெளிநாடுகளிலும் ஆன்லைனிலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் பிரபலமானது. தற்போது புவிசார் குறியீடும் கிடைத்திருப்பதால் சர்வதேச சந்தையில் கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனை அதிகரிக்கும் என்கின்றனர் வர்த்தகர்கள்.

கரிசல் மண்ணுக்கு மகுடம்!

Related posts

Leave a Comment