சூப்பர் நியூஸ்.. வீட்டு கேஸ் சிலிண்டர்கள் விலை கிடுகிடு சரிவு.. சென்னையில் ரூ.192 குறைந்தது

சென்னை: தமிழகத்தில் மானியமில்லாத வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது. தமிழகத்தில் மே மாதத்திற்கான மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு விலை குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. இதன்படி, ஒரு சிலிண்டருக்கு 192 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.761.50 என்பதாக இருந்தது

விலை குறைப்பு காரணமாக, மே மாதம் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.569.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக, எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு சிலிண்டர் ரூ. 162.50 குறைக்கப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் நாட்டின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற விலை குறைப்புகளைச் செயல்படுத்தியுள்ளன. மும்பையில், எல்பிஜி சிலிண்டருக்கு 579 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பு இது 714.50 ரூபாய் என்ற அளவில் இருந்தது. கொல்கத்தாவில், சமையல் எரிவாயு விலை ரூ.190 குறைத்து 584.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

உலகளாவிய எரிசக்தி சந்தை சரிவின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் விலைகள் குறைக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து விலை அதிகரித்து வந்தன.

கொரோனா வைரஸ் தொடர்பான லாக்டவுன் மார்ச் 25 முதல் தொடங்கியதிலிருந்து, எல்பிஜி சிலிண்டர்களை அதிக அளவுக்கு வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் ஆலைகள், ஹோட்டல்களில் விற்பனை இல்லை என்பதால், காஸ் சிலிண்டர் விலை குறையத் தொடங்கியுள்ளது.

Related posts

Leave a Comment