படுமோசமான வீரர்கள் பட்டியலில் பும்ராஹ்வுக்கு இடம்; சர்ச்சையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய ஊடகம் !!

படுமோசமான வீரர்கள் பட்டியலில் பும்ராஹ்வுக்கு இடம்; சர்ச்சையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய ஊடகம்

ஆல்டைம் மோசமான டெயிலெண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் நல்ல பேட்டிங் ஆட தெரிந்த பவுலரின் பெயரை ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மீடியா சேர்த்துள்ளது.

ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே கிரிக்கெட் வீரர்கள், சக வீரர்களுடனும் ரசிகர்களுடனும் சமூக வலைதளங்களில் உரையாடுவது, கேள்விகளுக்கு பதிலளிப்பது, ஆல்டைம் சிறந்த அணிகளை தேர்வு செய்வது என பொழுதுபோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மீடியா, ஆல்டைம் மிக மோசமாக டெயிலெண்டர் பேட்ஸ்மேன்கள் 11 பேரை தேர்வு செய்துள்ளது. அதில் நன்றாக பேட்டிங் ஆட தெரிந்த இந்தியாவின் அஜித் அகார்கரின் பெயரை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேர்த்திருப்பது இந்திய ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
ஏனெனில் அகார்கர் நன்றாக பேட்டிங் ஆடக்கூடியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் லார்ட்ஸில் சதமடித்தவர் அகார்கர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 95 ஆகும். இந்தியாவிற்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 571 ரன்கள் அடித்துள்ள அகார்கர், 191 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1269 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டியில் 21 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.அப்படியிருக்கையில், அவரது பெயரை மோசமான டெயிலெண்டர்கள் பட்டியலில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேர்த்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அகார்கர் மொத்தமாக 9 முறை டக் அவுட்டாகியுள்ளார். அதில் 8 முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான். அதனால் கூட அவரது பெயரை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேர்த்திருக்கும். ஆனால் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய தேர்வு அல்ல.
இந்தியாவில் அகார்கரை தவிர பும்ராவின் பெயரும் அந்த பட்டியலில் உள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ் மார்டின், வெஸ்ட் இண்டீஸின் குர்ட்னி வால்ஷ், ஆஸ்திரேலியாவின் மெக்ராத், இங்கிலாந்தின் மோண்டி பனேசர், டஃப்னெல், ஆஸ்திரேலியாவின் ப்ரூஸ் ரெய்ட், இங்கிலாந்தின் டேவன் மால்கோம், ஜிம்பாப்வேவின் ஒலங்கா மற்றும் பொம்மி பாங்வா ஆகியோரையும் மோசமான டெயிலெண்டர்களாக தேர்வு செய்துள்ளது ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்.

Related posts

Leave a Comment