புதிய இயல்பு வாழ்க்கை…
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், கூடுதல் உதவியாக குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.2000 உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
அரசின் அமுதம் அங்காடிகள், பண்ணைப்பசுமை காய்கறி கடைகளை, அரசு சிற்றுந்து பேருந்துகளை (Small Bus) பயன்படுத்தி நடமாடும் கடைகளாக மாற்றுவதோடு, அந்தந்த பகுதி வணிகர்களையும் இதில் இணைத்து, அனைவரும் வீட்டிலயே இருங்கள், மக்களின் வீட்டுக்கே அத்தியாவசிய பொருட்கள் வரும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்
பரிசோதனைகளை அதிகப்படுத்தியதே, பாதிகக்கபட்டவர்களை கண்டறிய உதவுகிறது என மருத்துவ குழுவினர் கூறுவதை தான் ஆரம்பம் முதலே கூறிவருகிறேன். எனவே மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை போன்ற பெருநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், தேவையான கருவிகளை மத்தியஅரசிடம் கேட்டு பெறவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொரோனா தொற்று நீடிக்கும் காலத்திலும், அதன் தாக்கம் குறைந்த பிறகும் கூட, ஒரு “புதிய இயல்பு வாழ்க்கை”, வாழத் தயாராகும்படி உலக சுகாதார நிறுவனம் கூறியதை நினைவில் கொண்டு, பொதுமக்களும் அந்த வாழ்க்கைகை வாழத் தயாராக வேண்டும். வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது, சமூகவிலகலை கடைப்பிடிப்பது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பதை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்
டிடிவி தினகரன் MLA
அமமுக, பொதுச்செயலாளர்