vanathi-balasubramanian

Apple, banana…
Red, blue, green yellow…
A, b, c, d..
1234…. சிறப்பு குழந்தைகளுக்கு இவற்றையெல்லாம் கடந்த கற்பித்தல் உண்டு. இதில் எவ்வித சலனமும் இன்றி தெளிவான நோக்கோடு என் குழந்தைகளுக்கான கற்பித்தல் திட்டத்தில் இதையும் சேர்த்துள்ளேன். இலந்தை பறிப்பதெல்லாம் ஒரு பயிற்சியா? ஒரு பாடத்திட்டமா? என எண்ணுவோருக்கான பதில் இதோ…

1.நான் குழந்தைகளுக்கு இலந்தை என்ற ஒரு பழத்தை அறிமுகம் செய்கிறேன். நகரத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு கூட இப்பழம் தெரியாது

  1. இது முட்கள் நிறைந்த புதர் என்பதால் முட்கள் படாது பறிக்கும் கவனம் அதிகமாகும். அதாவது புலனறிவு தூண்டப்படும்.
    3.விரல்களும், கண்களும் ஒருமித்து செயல்படும். Eyehand Coordination என்ற வார்த்தையையும், அதற்காக குழந்தைகள் படுகின்ற பாடும் அவர்களின் பெற்றோர் நன்கறிவர்
  2. Lays, kurkure என்பதற்கெல்லாம் இடம் தராத ஆரோக்யமான சிற்றுண்டி
    5.இதனை மதிப்புக்கூட்டி இலந்தை வடை, ஜாம் என்று செய்து விற்பனை செய்து வாழலாம்.

கல்வி என்பது நான்கு சுவற்றிற்குள், தொங்கவிடப்பட்டிருக்கும் அட்டைகளில் உள்ள படங்களையும், எழுத்துகளையும் மனனம் செய்வதும், மீண்டும் மீண்டும் ஒப்புவித்தல் மட்டும் அல்ல..

  1. வாசி வாழ்வியல் மையம்.
    2/525
    வடமலைசமுத்திரம் ரோடு,
    கருத்தபிள்ளையூர் to பாபநாசம்
    அம்பாசமுத்திரம்
    திருநெல்வேலி 627418

தொடர்பு எண். 9677853412

Related posts

Leave a Comment