OndrinaivomVaa Rajapalayam news

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி இராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் #OndrinaivomVaa என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டும் MLA அவர்கள் தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொண்டும் ஊரடங்கால் உணவுக்கு மிகவும் சிரமப்படுவதாக உதவி கேட்டவர்களுக்கு MLA அவர்கள் ஏற்பாட்டில் இன்று 106 ஏழை எளிய பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு காய்கறிகள் அடங்கிய பைகளை தென்காசி MP திரு.தனுஷ் M.குமார் அவர்களும் திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்களும் வழங்கினார்கள். மேலும் இதுவரையில் இராஜபாளையம் தொகுதியில் 3212 ஏழை எளிய பொதுமக்கள் MLA அவர்களால் பயனடைந்துள்ளனர். இந்நிகழ்வில் நகர செயலாளர் திரு.ராமமூர்த்தி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read More

#OndrinaivomVaa

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின்படி, சாத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை ஒன்றிய தலைவர் திருமதி.நிர்மலா கடற்கரை ராஜ், திரு.S.V.சீனிவாசன், நகர செயலாளர் திரு.குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் திரு.முருகேசன், திரு.C.சரவணகுமார், திரு.G.முருகன் ஆகியோர் வழங்கினர்.

Read More

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர விரும்பினால் nonresidenttamil.org ல் பதிவு செய்க..!

சென்னை: வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு https://nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:

Read More

தமிழகத்தில் இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா தொற்று… ஒருவர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 -ஆக அதிகரித்துள்ளது. அதில் இன்று மட்டும் ஒருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு 1341 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்கள். அதில் இன்று மட்டும் 29 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காற்றைவிட வேகமாக கொரோனா பரவி வருவதால் சென்னை மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உள்ள…

Read More

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ திடீர் முடிவு.. யாருக்கு லாபம்..? யாருக்கு நஷ்டம்..? #TCS #Wipro #Infosys #Coronavirus

இந்திய ஐடி நிறுவனங்கள் கொரோனா பாதிப்பால் புதிய வர்த்தகத்தைப் பெறப் போராடும் நிலையில், தனது லாப அளவீடுகளை அதிகரிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறது. புதிய வர்த்தகம் எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது இருக்கும் வர்த்தகத்தை வைத்துத் தான் வருவாய் ஈட்ட முடியும், இந்நிலையில் லாப அளவீடுகளை அதிகரிக்கச் செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் படி இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தற்போது முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது. இது ஐடி நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்தாலும், பலருக்கும் இதன் மூலம் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்திய ஐடி நிறுவனங்கள் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, Mindtree ஆகிய நிறுவனங்கள் தனது செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சப்காண்டிராக்ட் திட்டத்திற்காகச் செலவிடப்படும் தொகையை மற்றும் அவர்களுடனான வர்த்தகத்தையும் குறைக்க முடிவு…

Read More

யூகங்களை தகர்த்தெறிந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

கடந்த 20 நாட்களில் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததால் பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள படங்களை வட கொரிய செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் தேதியன்று ஆளும் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். அதுவே அவர் பங்கேற்ற கடைசி பொதுநிகழ்ச்சி ஆகும்.  அதன் பின்னர் அந்நாட்டின் மிக முக்கிய நிகழ்வான வட கொரியாவை நிறுவியவரும் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம்-2 சங்கின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கிம் பங்கேற்காதது பல்வேறு யூகங்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. கிம் ஜாங் உன், அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் அவரின் உடல்நிலை மோசமாகி கவலைக்கிடமானதாக வெளியான தகவல் உலகையே பரபரப்பாக்கியது. இது குறித்து…

Read More

ஆப்கானிஸ்தானுடனான ஒப்பந்தத்தை மீறிவிட்டதா தலிபான்?

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அதனை தங்கள் ஆளுகைப்பகுதியாக கருதி வருகின்றனர். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது குண்டுவெடிப்பு சம்வங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தலிபான்களுக்கும் ஆப்கான் அரசுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து இருதரப்பினரும் சண்டையை நிறுத்துவதாக அறிவித்திருந்தனர். இருப்பினும் அங்கு கடந்த சில தினங்களாக அங்கு பயங்கரவாத சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அங்குள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள நாவா பகுதியில் உள்ள ராணுவம் முகாம் அருகில் இன்று சக்தி வாய்ந்த…

Read More

தேர்தலில் என்னை தோல்வியடைச்செய்ய சீனா புதிய திட்டம்: அதிபர் டிரம்ப்

அதிபர் தேர்தலில் தன்னை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதற்காகவே சீனா கொரோனா குறித்த தகவல்களை கூற மறுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரை அங்கு வைரஸ் தொற்றால் 60,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 10,64,194பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினம் தோறும் குவியும் நோயாளிகளால் திணறியுள்ள அந்நாட்டு அரசு நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவ சீனா தான் காரணம் எனவும் வைரஸ் தொற்று தொடர்பான சர்வதேச விசாரணையை சீனா மீது நடத்த வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். மேலும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தொழில்நுட்பம் தொடர்பான பொருட்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார். …

Read More

1,200 புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் சொந்த ஊர் பயணம்!

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மாநிலங்களில் தங்கி பணிபுரிந்துவந்த ஆயிரக்ககணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு அவர்கள் ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு திரும்பி அனுப்ப மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரி வந்தனர். புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்துகளில் அனுப்பிவைக்க உள்துறை அமைச்சகம் அனுமதித்த நிலையில் தொலைதூரத்திற்கு லட்சக்கணக்கானவர்களை அனுப்புவது சிரமம் என மாநில அரசுகள் கருதின. இதனை மத்திய அரசிடம் அவர்கள் வலியுறுத்தினர்.  மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று 5 வார காலத்திற்கு பிறகு சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது மத்திய அரசு. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் லிங்கம்பள்ளியில் இருந்து ஜார்க்கண்டின் ஹாதியா மாவட்டத்திற்கு 1,200 பேருடன் இன்று காலை 24 பெட்டிகள் கொண்ட…

Read More

சிறப்பு ரயில்களை இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், இடம் பெயர்ந்த பணியாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்காக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உரிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷ்ராமிக் சிறப்பு ரயில் என்ற பெயரில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு கட்டணம் உண்டு. வழக்கமான ரயில்களைப் போல் அல்லாமல், Point to Point ரயில்களாக இவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு செல்லும் பயணிகள், உரிய மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர் என்றும், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை புறப்படும் இடத்திற்கு உரிய மாநில அரசு…

Read More