ஆப்கானிஸ்தானுடனான ஒப்பந்தத்தை மீறிவிட்டதா தலிபான்?

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.


ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அதனை தங்கள் ஆளுகைப்பகுதியாக கருதி வருகின்றனர். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது குண்டுவெடிப்பு சம்வங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தலிபான்களுக்கும் ஆப்கான் அரசுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து இருதரப்பினரும் சண்டையை நிறுத்துவதாக அறிவித்திருந்தனர். இருப்பினும் அங்கு கடந்த சில தினங்களாக அங்கு பயங்கரவாத சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அங்குள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள நாவா பகுதியில் உள்ள ராணுவம் முகாம் அருகில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. 


இந்த குண்டு வெடிப்பில் சம்பவத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அமைதிப்பேச்சுவார்த்தைக்கு பின்னரும் அங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் பயங்கரவாத சம்பவங்கள் அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment