‘சந்திரமுகி 2’ படத்தின் மாஸ் அப்டேட்..! வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகர்..

பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் சந்திரமுகி.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி. வாசு எடுக்கப்போவதாக தகவல்கள் கசிந்திருந்தது.

மேலும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து பி.வாசு, நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களை வைத்து இயக்கப்போவதாக தெரியவந்துள்ளது.

சந்திரமுகியின் முதலாம் பாகத்தில் வேட்டையன் கதாபாத்திரமும் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா கதாபாத்திரமும் தான் மிக முக்கியமானது.

தற்போது சந்திரமுகி 2 படத்தில் வேட்டையான் கதாபாத்திரத்திலும் நடிகர் லாரன்ஸ் தான் நடிக்க போகிறாராம்.

ஆனால் ஜோதிகாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

Leave a Comment