போலீசாருக்கு விடுப்பு; புதிய திட்டம் அமல்

சென்னை: கொரோனா பரவல் காரணமாக, சென்னையில், காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரில், 20 சதவீதம் பேருக்கு விடுப்பு அளித்து, தனிமைப்படுத்தும் திட்டம் அமலுக்கு வர உள்ளது.

சென்னையில், 135 சட்டம் – ஒழுங்கு; 128 குற்றப்பிரிவு; 35 மகளிர்; 70 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில், பல்வேறு நிலைகளில், 22 ஆயிரம் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.தற்போது, இந்த காவல் நிலையங்களில் பணிபுரியும், ஒரு சில போலீசாருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பணிபுரியும் போலீசாரில், 20 சதவீதம் பேருக்கு, விடுப்பு அளிக்கப்பட்டு, அவர்களின் வீடுகளில், 15 நாட்கள் தனிமைப்படுத்தும் திட்டத்தை, சென்னை மாநகர போலீசார் அமல்படுத்த உள்ளனர்.

இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:ஒரு காவல் நிலையத்தில், 100 போலீசார் பணிபுரிந்தால், அவர்களில், 20 பேருக்கு விடுப்பு அளிக்கப்படும். அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என, பரிசோதனை செய்யப்படுவர். அவர்களுக்கு தொற்று இல்லை என, தெரிய வந்தால், மீண்டும் காவல் நிலையங்களில் பணியமர்த்தப்படுவர். அதேபோல, 15 நாட்களுக்கு ஒருமுறை, போலீசாருக்கு படிப்படியாக விடுப்பு அளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவர். இந்த திட்டத்தை இன்று அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Related posts

Leave a Comment