மே3 ல் முப்படைகள் சார்பாக அணிவகுப்பு மரியாதை: பிபின் ராவத்

கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் வகையில், மே 3ம் தேதி, கடற்படை கப்பல்கள் கடலில் அணிவகுப்பு நடத்தும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த முப்படைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவதளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முப்படைத் தளபதி பிபின் ராவத்,
ஆயுதப்படைகள் சார்பில் கொரோனா போராளிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம் எனவும்  மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், ஊர்காவல் படையினர், பத்திரிக்கைத் துறையை சேர்ந்தவர்கள், இந்த கடினமான நேரத்தில், மக்களை எப்படி காத்து  மற்றும் அரசின் செய்தியை கொண்டு சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.  


கொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் விதமாக, மே 3ல் காஷ்மீர் முதல் குமரி வரை விமானப்படை விமானங்கள் பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும் எனவும் கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் நாடுமுழுவதும் மாவட்டங்களில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் முன்பு ராணுவம் சார்பில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும் காவல்துறை நினைவிடத்தில் பாதுகாப்பு படை சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும் எனவும் பிபின் ராவத் தெரிவித்தார்.

Image

Related posts

Leave a Comment