அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்- அருணாசலேஸ்வரர் கோவில் தாராபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தாராபிஷேகம் இந்த ஆண்டு நாளை 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினமும் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தாராபிஷேகம் இந்த ஆண்டு நாளை 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினமும் நடைபெற உள்ளது. அப்போது உச்சிகால பூஜை தொடங்கி சாயரட்சை பூஜை வரை கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும்.

ஏலக்காய், ஜாதிக்காய் , ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை பன்னீரில் கலந்து மூலவர் மீது சொட்டு சொட்டாக விழும்படி தாரா அபிஷேகம் செய்யப்படும்

அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியர்கள் கூறும்போது, அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாராபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிக்கவும் ,எல்லா ஜீவராசிகளின் பாதுகாப்புக்காகவும், கோடையின் தாக்கம் குறைந்து போதிய மழை பெய்ய வேண்டியும், தோ‌ஷ நிவர்த்திக்காக தாராபிஷேகம் நடைபெறும்.

தாராபிஷேக காலங்களில் நற்காரியங்களுக்கு தோ‌ஷம் எதுவும் கிடையாது. தாராபிஷேக காலத்தில் அண்ணாமலையார் கோவில் நடை திறப்பு நேரத்திலும், 6 கால பூஜைகளிலும் எந்தவித மாற்றமும் இல்லை என்றனர்.

Related posts

Leave a Comment