இல்லாதோருக்கு உதவும் மாற்றுதிறனாளி: இதுவரை 850 பேருக்கு ரூ. 5.50 லட்சம் உதவி

அருப்புக்கோட்டை:கொரோனா ஊரடங்கால் அரசு , கட்சிகள், தொண்டு நிறுவனங்கள்,

தன்னார்வலர்கள் பாதிப்பு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வரும் நிலையில் விருதுநகர் கத்தாளம்பட்டி தெரு மாற்று திறனாளியான முத்துமணிகண்டன்

இல்லாதோருக்கு உணவு பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

டிவிமெகானிக்கான இவர் ‘சக் ஷம்’ (மாற்று திறனாளர் நலம் விரும்பும் தேசிய அமைப்பு) மாநில இணை செயலராக உள்ள இவர் முதியோர்கள், மாற்று திறனாளிகள் குடும்பங்கள்,

ஆதரவற்றவர்கள், திருநங்கைகளுக்கு நேரடியாக சென்று அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவீலரில் சென்று வழங்குகிறார். இவருக்கு ராம்கோ நிறுவனம், திருச்செந்துார் பாதயாத்திரை அன்னதான விழா குழு உணவு பொருட்களை வழங்குகின்றன . இதுவரை 850 பேருக்கு ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பு உணவு பொருட்களை வழங்கி உள்ளார். இவரை பாராட்ட 81244 38633ல் அழைக்கலாம்.

Related posts

Leave a Comment