கொரோனா தடுப்பு.. போலீசாருக்கு விமானப்படை மாஸ் மரியாதை.. டெல்லி போலீஸ் நினைவுச் சின்னத்திற்கு சல்யூட்

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளை செய்து வரும் போலீசாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெல்லி போலீஸ் நினைவு சின்னத்திற்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

இன்று நாடு முழுக்க கொரோனா தடுப்பு பணிகளை நாடு முழுக்க மேற்கொள்ளும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக முப்படை மரியாதை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி வருகிறது.

காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்த விமானப்படை அணிவகுப்பு நடக்கிறது. 500 மீட்டர் உயரத்தில் மிக தாழ்வாக இந்த விமானங்கள் பறந்து செல்கிறது. போர் விமானங்கள் சுகோய் -30 எம்கேஐ, ஜாகுவார் மற்றும் மிக் 29 ஆகிய விமானங்கள் நாடு முழுக்க பறக்க உள்ளது. டெல்லியில் ராஜ வீதியில் இந்த விமானங்கள் பறக்கும்.

அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள போலீஸ் மெமோரியலில் மலர் வளையம் வைக்கப்படுகிறது. மேலும் டெல்லியில் போலீஸ் நினைவுச் சின்னம் மீது விமானப் படை ஹெலிகாப்டர்கள் மலர்தூவி மரியாதை செய்தது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் காவலர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மரியாதை செய்யப்பட்டது.

டெல்லி போலீஸ் நினைவு சின்னம் கடந்த 2018ல் நிறுவப்பட்டது. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின் பல்வேறு நிகழ்வுகளில் பலியான 34844 போலீசாருக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சாணக்யபுரி பகுதியில் 6.12 ஏக்கர் பரப்பளவில் இந்த சின்னம் அமைந்துள்ளது. இங்கு 9.1 மீட்டர் உயரமும் 238 டன் எடையும் கொண்ட கிரானைட் கல் தூண் அமைக்கப்பட்டுள்ளது . அதேபோல் இங்கு இருக்கும் ‘வீரச்சுவர் ‘ தூணில் மொத்தம் 34844 போலீசாரின் பெயரும் எழுதப்பட்டுள்ளது. இதன் மீதுதான் இன்று இந்தியா விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

Related posts

Leave a Comment