சிவப்பு மண்டலத்தில் விருதுநகர்; அலட்சியத்தால் அவதி

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் 27ல் ராஜபாளையத்தை சேர்ந்த முதியவருக்கு கொரோனா உறுதியாக அதன் பின் தப்லிக் மாநாட்டிற்கு சென்று திரும்பிய 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த ராஜபாளையம், அருப்புக்கோட்டையை சேர்ந்த 6 பேருக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து விருதுநகர் குமராபுரத்தில் கல்லுாரி மாணவி, வெளிநாடு சென்று திரும்பிய கன்னிச்சேரிபுதுார் பொறியாளரையும் தொற்று தாக்கியது. இவர்களிடம் தொடர்பிலிருந்த கல்லுாரி மாணவி உறவினர் உட்பட மூவருக்கும் கொரோனா உறுதியானது.

களப்பணியில் இருந்த சாமிநத்தம் ஸ்ரீவி., ஆய்வாளர், குன்னுார் ஆரம்ப சுகாதார நிலைய லேப் டெக்னீஷியன், இதையடுத்து வெளியூர் சென்று திரும்பிய அருப்புக்கோட்டை

செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர், கன்னிச்சேரிபுதுார், மேலசின்னையாபுரம், குல்லுார்சந்தை

பகுதிகளை சேர்ந்தவர்கள் 5 , வெளிநாட்டில் இருந்து திரும்பிய 2 மருத்துவ மாணவர்கள் என மாவட்டத்தில் 32 பேருக்கு தொற்றுஉறுதியானது.இதில் 19 பேர் குணமடைந்த நிலையில்

13 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

Leave a Comment