சென்னையில் இன்று ஒரே நாளில் 8 காவலர்களுக்கு கொரோனா

சென்னை:
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை அமல்படுத்தும் நடவடிக்கையில் மாநில போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் போலீசார் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Related posts

Leave a Comment