நான் போன ஐபிஎல்-ல என்ன பண்ணேன்னு யாருக்குமே தெரியலை.. சொல்லக்கூடாத ரகசியத்தை சொன்ன அஸ்வின்

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் தன் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் எளிதில் கணிக்கவில்லை எனக் கூறிய அஸ்வின் தன் பந்துவீச்சு ரகசியத்தை வெளிப்படையாக கூறினார். 2019 ஐபிஎல் தொடரில் அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று இருந்தார். அந்த சீசனில் கேப்டனாக இருந்த அஸ்வின் பந்துவீச்சில் அணியை முன் நின்று வழி நடத்தினார்.

மாற்றம் அந்த தொடரில் அவரது பந்துவீச்சில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவித்தனர். தன் பந்துவீச்சில் மாற்றம் செய்ததால் தான் பேட்ஸ்மேன்கள் திணறினர் எனக் கூறி அந்த மாற்றம் பற்றி விரிவாக விளக்கி உள்ளார் அஸ்வின்.

இந்திய அணி வாய்ப்பு அஸ்வின் கடந்த 2௦17 வரை இந்திய ஒருநாள் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி என மூன்றிலும் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருந்தார். 2017க்குப் பின் அவரை ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் இருந்து நீக்கியது கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

ஐபிஎல் அணி கேப்டன் எனினும், அஸ்வின் ஐபிஎல் தொடரில் முக்கிய வீரராக வலம் வந்தார் அஸ்வின். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார் அஸ்வின். பந்துவீச்சிலும் தொடர்ந்து கட்டுக் கோப்பாக பந்து வீசி வந்தார். அதே சமயம் பந்துவீசுவதில் புதிய முயற்சிகளையும் செய்து வந்தார்.

புதிய முறை பந்துவீச்சு சமீபத்தில் முன்னாள் வீரர் அஞ்சி மஞ்ச்ரேக்கரிடம் இணையதளம் ஒன்றின் பேட்டிக்காக பேசிய அஸ்வின், 2019 ஐபிஎல் தொடரில் தான் பயன்படுத்திய புதிய முறை பந்துவீச்சு பற்றி தெரிவித்தார். பேட்ஸ்மேன்கள் எப்படி ஏமாந்தார்கள் என்பது பற்றியும் கூறினார்.

ஆச்சரியமாக உள்ளது “நான் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறேன். என் உடல் ஒத்துழைக்காமல் போனால் டெஸ்ட் அணியில் மட்டும் மோசமான நிலை ஏற்படக் கூடும். கடைசி ஐபிஎல்-இல் நான் என்ன மாதிரி பந்து வீசினேன் என பேட்ஸ்மேன்கள் கணிக்காமல் போனது பற்றி எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என்றார்.

அந்த ரகசியம் “பேட்ஸ்மேன்கள் நான் கேரம் பால் வீசுவதாக நினைத்தார்கள். ஆனால், நான் ரிவர்ஸ் கேரம் பால் வீசினேன். அப்படி பந்து வீசிய போது பந்துகள் பிட்ச்சை தாண்டி சென்றன. சில சமயம் சுழன்றது. சில சமயம் வழுக்கிச் சென்றன.” என்று தன் பவுலிங் ரகசியத்தை கூறினார் அஸ்வின்.

அணி மாற்றம் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் அஸ்வின் 14 போட்டிகளில் 15 விக்கெட்கள் வீழ்த்தினார். எனினும், கேப்டனாக பஞ்சாப் அணியை பிளே-ஆஃப் அழைத்துச் செல்லாததால், அவரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அணி மாற்றம் செய்தது பஞ்சாப் அணி.

Related posts

Leave a Comment