ஆயிரம் பேருக்கு நிவாரண தொகுப்பு மாணிக்கம் தாகூர் எம்.பி., வழங்கினார்

விருதுநகர்:விருதுநகரில் துாய்மை பணியாளர்கள், நகராட்சி பகுதி வார்டு வாரியாக ஆயிரம் பேருக்கு 4 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை அடங்கிய மளிகை தொகுப்புகளை மாணிக்கம் தாகூர் எம்.பி., வழங்கினார்.
அதன்பின் அவர் கூறியதாவது: எம்.பி.,க்கள் நிதி அத்தியாவசியமான ஒன்று. அதை ரத்து செய்தது வேதனை அளிக்கிறது. தமிழக மக்களுக்கு மோடி அரசு கொடுத்துள்ள பணம் நாளொன்றுக்கு ரூ.8 என 54 நாட்களுக்கு ரூ.500, தமிழக அரசு ரூ.16 என 54 நாட்களுக்கு ரூ.ஆயிரம் கொடுத்துள்ளது. காங்., குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வழங்க கோரி வருகிறது. ஊரடங்கு பின் ஏழைகள் கடன் பிரச்னையால் திணற வாய்ப்புள்ளது. நுாறு நாள் வேலை திட்டம் மே 7ல் தான் துவங்க உள்ளனர், என்றார்.

Related posts

Leave a Comment