சிவகாசி மக்கள் கவனத்திற்க்கு

சிவகாசி மக்கள் கவனத்திற்க்கு

நமது மாவட்டத்தில்
ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது.
நமது ஊரில் எதுமில்லைனு
அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம்.

நாளை முதல் ஒரளவு வியாபாரஸ்தலங்கள் அலுவலகங்கள் இயங்க ஆரம்பிப்பதால்

முடிந்தவரை பொதுமக்கள் புலங்கும் இடங்களில் பொருத்தப்பட்டு உள்ள குளிர்சாதன(ஏசீ) கருவியை இயக்குவதை தவிருங்கள்.
அது கிருமிகளை தொடர்ந்து உயிருடன் வைத்திருக்க உதவக்கூடும்.
தொடர்ந்து போதிய சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.

வியாபாரஸ்தலங்களில் மாஸ்க் இல்லாமல் வரூம் நபர்களுக்கு
பொருட்களை விநியோகிக்காதீர்கள்.
அலுவலகங்களில் மாஸ்க் இல்லாமல் வரும் நபர்களை அனுமதிக்காதீர்கள்.
தொழிற்சாலை அலுவலகங்களில் வாசலில் ஒருவாளி நிறைய நீர் சேகரித்து வைத்து வரும் ஊழியர்களை கைகளை அலம்பிய பின் வேலை செய்ய அனுமதியுங்கள்.

சலூன் கடைகளில் உள்ள கத்திரி சேவிங் செட் சீப்பு போன்றவைகளை வெந்நீரில் அலசியபின் ஒவ்வொருவருக்கும் உபயோகிக்க அறிவுறுத்துங்கள்.
சென்னையில் வேலை பார்க்கும் சிவகாசி மக்கள் இனி கொஞ்சநாளைக்கு சொந்தஊரில் கிடைத்த வேலைகளை தேடிக்கொள்ளுங்கள்.

முடிந்தவரை வெளியூர் பயணத்தை
தவிர்க்கபழகுங்கள்.

வாழ்கவளமுடன்…

Related posts

Leave a Comment