நான் பார்த்ததிலேயே என்னை அச்சுறுத்திய பவுலர்கள் இவர்கள் தான் – ரோஹித் ஓபன் டாக்

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உலகெங்கிலும் நடைபெற்றுவரும் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படும், ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருந்த பதிமூன்றாவது ஐபிஎல் தொடரும் இருமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பி.சி.சி.ஐ ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி வரும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலமாக வீரர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர். மேலும் தங்களது அனுபவத்தை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போது இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் முன்னணி வீரரான ரோகித் சர்மா சமூக வலைத்தளத்தில் மூலம் உரையாடினார்.

சமூக வலைத்தளம் ம்மொலமாக நடைபெற்ற அந்த உரையாடலில் கிரிக்கெட் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஆரம்ப காலத்தில் தனது கிரிக்கெட் வாழ்வில் தான் சந்தித்த மிக கடுமையான பவுலர்களைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் : நான் கிரிக்கெட்டிற்கு அறிமுகமானபோது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தொடர்ந்து 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி கொண்டிருந்தார்.

அவரது பந்து வீச்சை எதிர் கொள்வது என்பது கடினமான விடயமாக அமைந்தது. அப்போது நான் அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். அது மட்டுமின்றி தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் மிகுந்த வேகத்துடன் பந்தை துல்லியமாக ஸ்விங் செய்யும் திறமை படைத்தவர். எனவே அவரை எதிர் கொள்வதிலும் நான் மிகவும் கடினப்பட்டேன்.

அதுமட்டுமின்றி இவர்கள் இருவரையும் சந்திக்க கூடாது என்றும் கூட நினைத்து உள்ளேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். மேலும் தற்போதைய கிரிக்கெட்டில் ரபாடா மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் சிறப்பாக பந்து வீசுவதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ரோஹித்தின் இந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

Leave a Comment