இன்று சிவகாசியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீ. ராஜா சொக்கர் அவர்கள் முயற்சியில் 5 கிலோ அரிசி,1 கிலோ மைதா,1 கிலோ கோதுமை 1/2 கிலோ நல்லெண்ணெய் 250 கிராம் மிளகாய்பொடி அடங்கிய மளிகை பொருட்கள் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1000 நபர்களுக்கு வழங்குவதற்கு இரண்டாம் கட்டமாக சிவகாசி,சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உடல் ஊனமுற்றோர் கண் பார்வை இழந்தோர் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளருமான விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் செல்வர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் நிவாரணப் பொருள்களை வழங்கினார். உடன் வழக்கறிஞர் குப்பையாண்டி, நகர தலைவர்கள் குமரன் தாமோதரன், மாரீஸ்வரன் மற்றும் சேர்ம துரை, ஒன்றிய கவுன்சிலர் முருகன் , வட்டார தலைவர்கள் சீனிவாசன், தங்கராஜ், பைபாஸ் வைரம் தர்மராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
Manicka Tagore Member of parliament
