கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.. 20 வருஷமாகிடுச்சு.. இன்னும் அந்த மேஜிக் மறையல.. ரஹ்மான் ட்வீட்!

சென்னை: இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் தல அஜித், மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், தபு நடிப்பில் வெளியான படம் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.

கடந்த 2000ம் ஆண்டு மே 4ம் தேதி இந்த படம் திரைக்கு வந்தது. நேற்றுடன் 20 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இந்த படத்திற்கு ரம்மியமான பாடல்களை இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான், ராஜீவ் மேனனின் இன்ஸ்டா பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நடிகர் அஜித்துக்கு இந்த படத்தில் தபு ஜோடி என்றாலும், அப்பாஸை காதலித்து, அந்த காதலில் தோற்று, கால் இழந்த குடிகார மேஜரான மம்முட்டியை கரம் பிடிக்கும் நடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராய் கதையின் நாயகியாக கலக்கி இருப்பார். கண்ணா மூச்சி ஏனடா? பாடலில் அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

இசைப்புயல் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம் வந்து 20 ஆண்டுகள் ஆனதை அறிந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் ராஜிவ் மேனன் பதிவிட்டு இருந்த இன்ஸ்டாகிராம் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களும் அந்த எவர்க்ரீன் திரைக்காவியம் குறித்த பதிவுகளையும், ரஹ்மானின் இசை குறித்தும் பாராட்டி வருகின்றனர்.

Related posts

Leave a Comment