சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது- தமிழக அரசு

சென்னை:

தமிழகத்தில் மே 7-ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மே 7-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment