10ம் வகுப்புக்கு தேர்வு எப்போது? வெளியாகிறது அட்டவணை

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூனில் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை, இம்மாதம் மூன்றாம் வாரம் வெளியாகிறது.

தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து விட்டன. பிளஸ் 1க்கு ஒரு பாடத்துக்கும், 10ம் வகுப்புக்கு ஐந்து பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இந்த தேர்வுகளை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. வரும், 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால், அதன்பின் ஏற்படும் நிலைமைக்கு ஏற்ப, ஜூனில் தேர்வை நடத்த, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2வுக்கு மட்டும், மார்ச், 24ல் நடந்த தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு, ஜூன் முதல் வாரத்திலேயே தேர்வை நடத்திட, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இவற்றுக்கான அறிவிப்பு, இம்மாதம் மூன்றாவது வாரம் வெளியாக உள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி எப்போ?


தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச், 24ம் தேதியுடன் முடிந்தன. அதேநேரத்தில், மார்ச், 24ல் நடந்த தேர்வுகளில், 34 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு மட்டும், வேறொரு நாள் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வுக்கான விடைத்தாள்களை, வரும், 18ம் தேதி முதல் திருத்தவும், ஜூனில் தேர்வு முடிவை வெளியிடவும், பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கொரோனா வார்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளை தவிர, மற்ற அரசு மேல்நிலை பள்ளிகளிலும், தனியார் மேல்நிலை பள்ளிகளிலும், விடைத்தாள் திருத்தும் பணி துவங்க உள்ளது.


Related posts

Leave a Comment